நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன் | கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை |
இமயம், கேப்டன் தொலைக்காட்சிகளில் 3 ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் பிரியங்கா. தற்போது, என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி போன்ற தொடர்களில் நடித்து வரும் பிரியங்கா, ஐஏஎஸ் வேடத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தால் சம்பளம் வாங்காமலேயே நடிப்பேன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக பிரியங்காவுடன் ஒரு சந்திப்பு...
நிகழ்ச்சி தொகுப்பாளினியான நீங்கள் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியது ஏன்?
கல்லூரியில் படித்து வந்தபோதே ஆங்கரிங் பண்ண எனக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே சேனல்களில் பங்குபெற வேண்டும் என்கிற ஆசையும் எனக்குள் இருந்ததால் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சேனல்களில் தோன்றினேன். 6 மாதங்கள் இமயம் டிவியில் இருந்த நான், பின்னர் இரண்டறை ஆண்டுகளாக கேப்டன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தேன்.
அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என்று நினைத்தபோது, சீரியல்களில் நடிக்க முடிவு செய்தேன். நான் ஆசைப்பட்டது போன்று என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி ஆகிய இரண்டு தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு உடனடியாக கிடைத்ததால் இப்போது சீரியல் நடிகையாகி விட்டேன். என்றாலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் தொடர்ந்து வருகிறேன்.
இந்த தொடர்களில் எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறீர்கள்?
என் இனிய தோழியே தொடரில் சுஷ்மா என்ற போல்டான வேடத்தில் நடிக்கிறேன். சொந்தமாக கம்பெனி நடத்துகிறேன். லவ் பெயிலியரான பெண் என்பதால் ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று நினைக்கிறேன். அதனால் ஆண்களை வெறுக்கிறேன். ஆனால் ஒரு நல்லவரை சந்திக்கும்போது எல்லா ஆண்களுமே கெட்டவர்கள் இல்லை என்ற மனநிலைக்கு மாறுகிற வேடம். துணிச்சலான பெண் வேடம் என்பதோடு இந்த காலத்தில் ஒரு பெண் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் வேடம். அதோடு நெகடீவ்வான விசயங்களையும் பாசிட்டீவாக மாற்றும் வேடம் என்பதால் அதிக என்சாய் பண்ணி நடித்து வருகிறேன்.
அடுத்து, சபீதா என்கிற சபாபதி தொடரில் கரிஷ்மா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த தொடரில் சிஐடி சகுந்தலா, சண்முகசுந்தரம், பாண்டு, நித்யா, பயில்வன் ரங்கநாதன் என பல சீனியர் நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். இந்த தொடரில் நான் வீட்டுக்கு செல்லமான, அப்பாவி பெண் ரோலில் நடிக்கிறேன்.
சீனியர் கலைஞர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
நடிப்புக்கு புதிதான நாம் அவர்களுடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்கிற பயத்துடன்தான் ஸ்பாட்டுக்கு சென்றேன். ஆனால் அவர்கள் அனைவருமே என்னை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினர். சீனியர்கள் என்பதால் பக்குவமாக நடந்து கொண்டனர். அதோடு, சிஐடி சகுந்தலா மேடம், கேமராவுக்கு முன்னாடி வரும்போது எப்படி இருக்க வேண்டும். என்னென்ன விசயங்களை செய்யக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயங்களை கற்றுக்கொடுத்தார். அது வளர்ந்து வரும் நடிகையான எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. ஆக, ஒரே சீரியலில் இத்தனை பெரிய நடிகர் நடிகைகளுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன்.
எந்த மாதிரியான கேரக்டர்களில் நடித்து உங்களை ஒரு நடிகையாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
சவாலான எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். குறிப்பாக, ஐஏஎஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த வகையில், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் சிம்ரன் நடித்திருந்த ரோல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேமாதிரியான காஸ்டி யூமில், கெத்தான ஐஏஎஸ் அதிகாரியாக, மாடலேஷன், பாடி லாங்குவேஜ், கமெண்டிங் பவர் காட்டி நடிக்க வேண்டும். அப்படியொரு சான்ஸ் கிடைக்கும் பட்சத்தில் அதில் சம்பளமே வாங்காமல் நடிக்கக்கூட நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் நடிகை பிரியங்கா.