ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
*கணவரை பிரிந்து விட்ட ரம்மியமான தொகுப்பாளினி நடிப்பு, மாடலிங், காலண்டருக்கு கிளாமரான போஸ் என களம் இறங்கியிருப்பதில் அவரது குடும்பத்தினர் ரொம்பவே அப்செட். மீடியா ஏரியாவே வேண்டாம் வந்துவிடு என்று நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
*தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வந்த சேனல் மீது வழக்கு தொடுக்க நினைத்திருந்தாராம் மங்களகரமான தொகுப்பாளினி மற்றும் நடிகை. சேனல் தரப்பிலிருந்து பேசப்பட்ட சமாதானத்தை தொடர்ந்து தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாராம்.
*பாபத்தை நாசம் செய்த படத்தில் வில்லியாக நடித்த நடிகை மலையாள தொடர் மூலம் புகழ்பெற்றவர். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க முயற்சித்தபோது "சாரி மேடம் உங்க இமேஜ் இப்போ மாறிடுச்சு..."ன்னு கைவிரிச்சுட்டாங்களாம் சேனல் காரங்க.
*குடும்ப சாமியை கும்பிடும் தொடரின் நாயகிக்கும், இயக்குனருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகியிருப்பதால் இயக்குனர் வீட்டுக்குள் பிரச்சினை வெடித்திருப்பதாக பேச்சு.
*படம் தயாரிக்குறவங்க சங்கம் சார்பில் தனியாக சேனல் துவங்கும் வேலைகள் ஆரம்பமாகியிருக்காம். சேனலின் பெயர்கூட தாயை குறிக்கும் இன்னொரு வார்த்தை என்கிறார்கள்.
*சமீபத்தில் வெள்ளம் வந்தபோது சித்து நடிகர் இறங்கி வேலை செய்து ஹீரோவானார். வெள்ள மீட்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு சேனல் அவரை அழைக்க, அதற்கு தான் தயாரிக்கும் படத்தை புரமோட் பண்ணுவீங்களா? இல்லைன்னா இவ்வளவு சம்பளம் தருவீங்களான்னு நடிகர் கேட்க, என்னங்க இப்படி பண்றீங்கன்னு சேனல் கேட்டதுக்கு "சமூக சேவை வேற பிசினஸ் வேற. நீங்க மட்டும் விளம்பரம் இல்லாமல் ஒளிபரப்புவீங்களா-?"ன்னு கறாரா சொல்லிட்டராம்.