சர்வதேசப் படமாகவே இருக்கும் : அல்லு அர்ஜுன் தந்த அப்டேட் | விஜே சித்துவின் டயங்கரம் | ஒவ்வொரு இந்தியன் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ; நடிகர் சோனு சூட் வேதனை | புகை பிடித்தல் மற்றும் மதுவுக்கு எதிரான வாசகங்கள் படம் பார்க்கும் மூடை கெடுக்கிறது : அனுராக் காஷ்யப் | வசூல் சண்டையை ஆரம்பித்த 'ஹிட் 3' : பதிலடி கொடுத்த 'ரெட்ரோ' | சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? |
அபூர்வராகம், கேளடி கண்மணி, என் இனிய தோழி, சபீதா என்கிற சபாபதி என நான்கு சீரியல்களில் தற்போது பிசியாக நடித்து வருபவர் ஏகவள்ளி. இதில் கேளடி கண்மணியில் வில்லியாக நடிக்கும் அவர், மற்ற தொடர்களில் பாசிட்டீவ் ரோல்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
உங்களை எந்தமாதிரியான வேடங்களில் நேயர்கள் அதிகமாக ரசிப்பதாக நினைக்கிறீர்கள்?
அப்பாவித்தனமான வேடங்களில் நான் அழுது நடிப்பதை அதிகமாக ரசிக்கிறார்கள். தங்களது மனதில் எனக்கு இடம் கொடுக்கிறார்கள். அப்படி பல சீரியல்களில் நடித்துதான் ஏராளமான பெண்களின் மனதை கொள்ளையடித்து வைத்திருக்கிறேன். அதேசமயம், நான் நெகட்டீவாக நடித்த வேடங்களிலும் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி நடிக்கிற சீரியல்களைப்பார்த்து விட்டு, நீங்கள் எல்லா சீரியல்களிலும் அழுது நடிப்பதால் வில்லியாக நடிப்பது வித்தியாசமாக உள்ளது என்கிறார்கள். ஆக, அழுகாச்சி கேரக்டர்களே எனக்கு பொருந்துவதால், அந்த ரூட்டையே தொடர விரும்புகிறேன். மேலும், அழுது நடிக்கும்போது பெண்களை மட்டுமில்லாமல் ஆண்களையும் கவர முடியும் என்பது எனது கருத்து.
ஒவ்வொரு சீரியல்களிலுமே அழுது கொண்டிருந்தால் எப்படி?
எல்லா சீரியல்களிலுமே அப்படி நான் நடிக்கவில்லை. இரண்டு சீரியல்களில் அழுகாச்சியாக நடித்தால் மற்ற சீரியல்களில் வில்லியாக, செண்டிமென்டாக நடிக்கிறேன். இப்படி ஒரு கலவையாகத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும், ஆரம்பத்தில் என் முகத்தை பார்த்தால் வில்லி மாதிரி உள்ளது என்று என்னை நெகடீவ் ரோல்களில் நடிக்க வைத்தனர். ஆனால் இப்போது உங்கள் முகம் அப்பாவித்தனமாக உள்ளது என்று சொல்லி பாசிட்டிவ் வேடங்களை தருகிறார்கள். இப்படி ஒவ்வொரு டைரக்டர்களின் பார்வைக்கும் நான் ஒவ்வொரு விதமாக தெரிகிறேன். அந்த வகையில், டைரக்டர்கள் எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறேன். இப்படி பலதரப்பட்ட வேடங்களில் நடிப்பதால் ஏகவள்ளி எல்லாவிதமான வேடங்களுக்கும் பொருந்துவார் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. நானும் இதையே விரும்புகிறேன்.
பாசிட்டீவ், நெகடீவ் இரண்டில் உங்களுக்கு எந்தமாதிரியான வேடங்கள் அதிகம் பிடிக்கும்?
எனக்கு இரண்டுமே பிடிக்கும். காரணம், பாசிட்டீவ் ரோலில் ஒரு மாதிரியான நடித்தால், நெகடீவ் ரோலில் இன்னொரு மாதிரியாக நடிக்கலாம். இப்படி மாறி மாறி நடிப்பது ஒரு ஆர்ட்டிஸ்டாக எனக்கு நல்ல அனுபவமாக உள்ளது. அதோடு மனதுக்கு நிறைவாகவும் உள்ளது. அதனால் ஒரு கோடு போட்டுக்கொண்டு நடிக்காமல் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டி நடித்து வருகிறேன். மேலும், எந்தவொரு கேரக்டர் பண்ணினாலும் அதை நாம் விருப்பப்பட்டு பண்ணினால் நல்ல பர்பாமென்ஸ் கொடுக்கலாம். அதேபோல், ஒவ்வொரு நாளும் ஸ்பாட்டுக்கு செல்லுபோது அன்று எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கப்போகிறேனோ அதே மாதிரியான மனநிலையுடன்தான் செல்வேன். ஸ்பாட்டிலும் அந்த கேரக்டர் என்னென்ன பேசுமோ அப்படித்தான் பேசிக்கொண்டிருப்பேன். ஆக, ஒவ்வொரு நாளும் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள்தான் எனது நிஜ கேரக்டரையும் தீர்மானிக்கின்றன.
மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிக்கும் ஆர்வம் உள்ளதா?
அந்த மாதிரி வேடங்களில் பெரிதாக பர்பாமென்ஸ் கொடுக்க முடியாது. என்றாலும் எனக்கு கிடைக்கும்பட்சத்தில் மறுக்காமல் நடிப்பேன். மேலும், இப்போது அபூர்வ ராகம் தொடரில் பழைய நினைவுகளை இழந்து விட்டது போன்ற ரோலில் நடிக்கிறேன். விளையாட்டுத்தனமாக பேசுவது. குழந்தைத்தனமாக நடந்து கொள்வது இதுதான் அந்த கேரக்டர். அது என்னோட நிஜ கேரக்டரும்கூட. அதனால் ரொம்ப தத்ரூபமாக அந்த ரோலில் நடித்து வருகிறேன். இதில் நடித்து வருகிறேன் என்று சொல்வதை விட என்னுடைய யதார்தத்தை வெளிப்படுத்தி வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் நடிப்பீர்களா?
இப்போது ஆபீஸ் சீரியல் விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் இவன் யாரென்று தெரிகிறதா படத்தில் நடிக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். சீரியலில் இருந்து மாறுபட்டு ஜாலியாக, துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். காரணம், யாராவது என்னிடம் மாட்டிக்கொண்டால் அவர்களை கலாய்ச்சி எடுத்து விடுவேன். அப்படியொரு வாயாடி நான். அதனால் ஜாலியான வேடங்கள் எனக்கு மிக பொருத்தமாக இருக்கும்.
அதோடு, சீரியல்களில் காமெடியான வேடங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அந்த மாதிரி எனக்கு கிடைக்கவில்லை. அதனால் சீரியல்களில் கிடைக்காத காமெடி வேடங்கள் சினிமாவில் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக நடிப்பேன் என்கிறார் ஏகவள்ளி.