மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழில் பொம்மலாட்டம் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரீஜா, தற்போது கன்னட சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொம்மலாட்டம் தொடரில் நடித்துக் கொண்டே தற்போது ஜீ கன்னடா சேனலில் ஒளிபரப்பாகும் மகாதேவி தொடரில் அம்மனாக நடித்து வருகிறார். இதற்காக அடிக்கடி பெங்களூருக்கு பறந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீஜா.
அம்மன் கேரக்டரில் நடிப்பதால் அதற்கு ஏற்ற மாதிரி விரதம் இருந்து உணவு கட்டுப்பாட்டுடன் நடித்து வருகிறார். அம்மன் எப்போதாவதுதான் பக்தர்களுக்கு காட்சி தருவாள் என்பதால் நீண்ட நாள் நடிக்க தேவையில்லாததால் மாதத்தில் ஒரு வாரம் மட்டும் மகாதேவி சீரியலுக்கு ஒதுக்கி இருக்கிறார். மற்ற நாட்களில் பொம்மலாட்டத்துக்காக சென்னை வந்து விடுகிறார். மகாதேவி தொடரை தயாரிக்கும் நிறுவனம் அடுத்து கன்னடத்தில் தாங்கள் தயாரிக்க இருக்கும் ஒரு தொடரின் நாயகியாக நடிக்க ஸ்ரீஜாவை கேட்டிருக்கிறது. அவருக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார். பொம்மலாட்டம் முடிந்த உடன் நடிக்கலாமா அல்லது ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களிலும் நடிக்கலாமா என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார்.