ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மயூரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதா சந்திரன். நாட்டிய கலைஞரான சுதா சந்திரன் ஒரு காலை இழந்த மாற்றுத் திறனாளி. அவரது கதைதான் மயூரி திரைப்படமாக வந்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்த மயூரி, சிறிய இடைவெளிக்கு பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழில் அரசி தொடரில் நடித்தவர். அதன் பிறகு இந்தி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். மீண்டும் கலசம் தொடர்மூலம் தமிழுக்கு வந்தார். கஸ்தூரி, தகதிமிதா, தென்றல் உள்பட பல சீரியல்களில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் சேனலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
மீண்டும் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு நாகின் என்ற இந்தி தொடரில் நடிக்கிறார். இதனை ஏக்தாகபூர், பாலாஜி டெலி லிமிடெட் என்ற நிறுவனம் தயாரித்து ஒளிபரப்புகிறது. இதே நிறுவனம் முன்பு தயாரித்த ரமோலா சிக்கந்த் என்ற இந்தி தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.