லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மோகன் நடித்த பிரபலமான படம் மெல்ல திறந்தது கதவு. அந்த படத்தின் பெயரில் ஜீ தமிழ் சேனல் புதிய தொடர் ஒன்றை கடந்த 2ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
சீரியல்களின் வரலாற்றில் இந்த தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும். காரணம் முழுக்க முழுக்க காதல் கதை என்பதோடு. பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை.
புதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்.கண்ணன் இசை அமைக்கிறார். வி.சங்கர்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், திவ்யா விஷ்வநாதன் தயாரிக்கிறார், பிரம்மா ஜி.தேவ் இயக்குகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கிறது மெல்ல திறந்தது கதவு.