இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ஒருகாலத்தில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் கலக்கியவர் ஜோதிலட்சுமி. 300 படங்களுக்கு மேல் ஆடியுள்ளார். 50 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்துள்ளார். வயதாகிவிட்டதால் ஆடுவதை குறைத்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
பல வருடங்களுக்கு முன்பு சரிகம நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பிய வேலன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இப்போது அதே சரிகம நிறுவனம் தயாரிக்கும் வள்ளி தொடரில் நடிக்க வந்திருக்கிறார். மர்மமான பின்னணி கொண்ட டெரர் பாட்டியாக நடிக்கிறார்.
"நடிப்பை விட்டு நான் எப்போதுமே விலகியதில்லை. சில நாள் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றியது. அதனால் சின்ன பிரேக் எடுத்துக் கொண்டேன். வள்ளியில் நல்ல கேரக்டர் கிடைத்தது. சரிகம முக்கியமான நல்ல நிறுவனம் அதுதான் மீண்டும் வந்துவிட்டேன். மக்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் உண்மையான சந்தோஷம். அதை விட முடியுமா" என்கிறார் ஜோதிலட்சுமி.