ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள செய்தி சேனலான மனோரமா நியூஸ், ஆண்டு தோறும் சிறந்த நியூஸ் மேக்கரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாசிட்டிவான நியூஸ் மேக்கராக இருந்து அதிகமுறை செய்திகளில் இடம்பெற்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் 2014ம் ஆண்டுக்கான நியூஸ் மேக்கரை தேர்வு செய்ய தனது நேயர்களிடம் எஸ்.எம்.எஸ், ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 2014ம் ஆண்டின் நியூஸ் மேக்கராக நடிகை மஞ்சு வாரியார் தேர்தெடுக்கப்பட்டார்.
நடிகர் திலீப்பை திருமணம் செய்த மஞ்சு வாரியார் 14 வருடங்களுக்கு பிறகு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். தனக்கு ஜீவனாம்சமோ, திலீப்பின் சொத்துக்களோ வேண்டாம் என்று தனி ஆளாக வெளியில் வந்தார். நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மஞ்சு வாரியார் ஹவ் வோர்ல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) படத்தின் மூலம் திரையுலகில் தான் விட்ட இடத்தை பிடித்தார்.
நடுத்தர வயதை தாண்டிய பிறகும் ஒரு பெண்ணால் சாதிக்க முடியும் என்பதை திரையிலும், நிஜத்திலும் நிரூபித்து காட்டியவர் மஞ்சு வாரியார். கொச்சியில் நடந்த விழாவில் அவருக்கு நியூஸ் மேக்கர் விருதை பிரபல நடிகை ஷபனா ஆஸ்மி வழங்கினார். இந்த நிகழ்ச்சி வருகிற 24ந் தேதி இரவு 9 மணிக்கு மனோரமா நியூஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.