ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய் தொலைக்காட்சி தனது கலைஞர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கி வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சிறந்த தொகுப்பாளராக நீயா நானா கோபிநாத்துக்கும், சிறந்த தொகுப்பாளினியாக காப்பி வித் டிடி திவ்யதர்ஷினிக்கும் வழங்கப்பட்டது. மற்ற விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:
சிறந்த பேவரிட் ஹீரோ: கெவின் (சரணவணன் மீனாட்சி)
சிறந்த பேவரிட் சூப்பர் சிங்கர்: சத்ய பிரகாஷ்
சிறந்த துணை நடிகர்: ஸ்டாலின்
சிறந்த கேம் ஷோ: கணெக்ஷன்
சிறந்த நீதிபதி (ஆண்): பாடகர் கார்த்திக்
சிறந்த நீதிபதி (பெண்): நடிகை ராதா
சிறந்த ஜோடி: பிரியா, அமித் (கல்யாணம் முதல் காதல் வரை)
சிறந்த காமெடி நடிகை: நந்தினி (சரவணன் மீனாட்சி)
சிறந்த காமெடி நடிகர்கள்: வடிவேல் பாலாஜி, அமுதவன்
சிறந்த இசை அமைப்பாளர்: இளையவன்