சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
சின்னத்திரையின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி குஷ்புதான். அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சியை இப்போது மறு ஒளிபரப்பு செய்தாலும் பார்க்கலாம். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டுகள் அப்போது பிரபலம். அதன் பிறகு பல நிகழ்ச்சிகள் சீரியல்களில் பங்கேற்ற குஷ்பு சில காலம் சினிமா தயாரிப்பில் பிசியாக இருந்தால் சின்னத்திரையை விட்டு விலகி இருந்தார்.
இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிம்ப்ளி குஷ்பு என்ற நட்சத்திர கலாட்டா நிகழ்ச்சியை நடத்துகிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பான காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு தற்போது பிரேக் விட்டிருப்பதால் அந்த இடத்தை பிடிக்க ஜீ தமிழ் திட்டமிட்டு குஷ்புவை களத்தில் இறக்கி இருக்கிறது. பேட்டி என்ற பெயரில் நடிகர் நடிகைகளை கலாய்ப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதன் மூலம் டிடி விட்ட இடத்தை குஷ்பு பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.