மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா | விஜய் ஆண்டனியின் அடுத்த எதிர்பார்ப்பு ‛சக்தி திருமகன்' | பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' |
அழகி, சொந்தம் பந்தம், ரெட்டை வால் குருவி என பல தொடர்களில் அதிரடியான வேடங்களில் நடித்தவர் கரோலின். இதில் அழகி தொடரில் நடித்தபோது தமிழ்நாட்டு பெண்களின் அதிகப்படியான வெறுப்புக்கு ஆளானார். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அவரை அதிரடியான வில்லியாக சித்தரித்து விட்டது. தற்போது அபூர்வ ராகங்கள் என்ற தொடரிலும மீனா என்கிற வில்லி வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கரோலின்.
அவரிடத்தில் எல்லா தொடர்களிலுமே வில்லியாகவே நடிப்பது ஏன். இதை நீங்களாகவே விரும்பி நடிக்கிறீர்களா? இல்லை உங்களை தேடி வருவதே அந்த மாதிரி வேடங்கள்தானா? என்று கேட்டபோது, என்னைப்பொறுத்தவரை எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் என்ன காரணமோ, முதலில் நான் வில்லி வேடத்தில் நடித்தே பிரபலமானதால், எல்லோருமே என்னை வில்லியாகவே பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அவர்களிடத்தில், பாசிட்டிவான வேடம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டால், இந்த ஸ்கிரிப்ட்டை பண்ணும்போதே வில்லி கதாபாத்திரத்திற்குள் நீங்கள் வந்து உட்கார்ந்து கொண்டீர்கள். அதனால் இந்த வேடம்தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறி விடுகிறார்கள். டைரக்டர்களே அப்படி சொல்லும்போது நான் என்ன செய்ய முடியும். அதனால் எனக்கு கிடைக்கிற வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அபூர்வ ராகங்கள் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, வில்லி வேடம் இருக்காது என்றுதான் நினைத்தேன்.