ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமான ஆர்யா கடந்த 10 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்துள்ளார். அவரது 25வது படம் ராஜேஷ் இயக்கி உள்ள ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க''. இந்தப் படம் வருகிற 14ந் தேதி வெளிவருகிறது.
ஆர்யா 25 படங்கள் நடித்து முடித்திருப்பதையொட்டி விஜய் தொலைக்காட்சி, ஆர்யா 25 என்ற சிறப்பு நிகழ்ச்சியை தயாரித்துள்ளது. இதில் ஆர்யா நடித்த படங்களிலிருந்து முக்கியமான காட்சிகள், ஆர்யா கலந்து கொண்ட சில முக்கிய விழாக்கள். அவர் வெளிநாட்டு சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி போன்றவை ஒளிபரப்பாகிறது. ஆர்யாவுடன் அவரது சக நண்பர்களான நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஷால், விஷ்ணு, ஜீவா, பரத், ஜி.பி.பிரகாஷ், ரமணா, விக்ராந்த் ஆகியோர் அரட்டையடிக்கிறார்கள். ஆர்யாவின் அருமை பெருமைகளை சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகிறது.