பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சின்னத்திரையிலிருந்து தொகுப்பாளினிகள், தொகுப்பாளர்கள், நடிகர், நடிகைகள் தான் சினிமாவிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அபூர்வமாக வேறு சில சின்னத்திரை பிரிவுகளிலிருந்தும் சிலர் நடிகர்களாவது எப்போதாவது நடக்கும். சின்னத்திரை பட்டிமன்றம் மூலம் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, ராஜா, ஞானசம்பந்தம் ஆகியோர் நடிகர் ஆனார்கள். அதில் ராஜா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பாலியல் பிரச்னைக்கு தீர்வு சொன்ன டாக்டர் மாத்ருபூதம், டாக்டர் ஷாலினி ஆகியோரும் சினிமாவுக்கு வந்தார்கள்.
அந்த வரிசையில் இப்போது சினிமாவுக்கு வருகிறார் சமையற்கலைஞர் தாமு. டாக்டர் எம்.ஜி.ஆர் உணவு கலைக்கல்லூரி முதல்வராக இருந்த தாமோதரன், அதன்பிறகு ஜெயா தொலைக்காட்சியல் சமையற்கலை நிகழ்ச்சியை நடத்தினர். இன்றைக்கு சின்னத்திரையில் உள்ள நட்சத்திர சமையற்கலைஞர்களில் ஒருவர் தாமு.
சமீபத்தில் வெளிவந்த இவனுக்கு தண்ணியில கண்டம் படத்தில் ஒரு காட்சியில் நடித்தார் தாமு. தற்போது திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கும் உள்குத்து படத்தில் முழுநீள கேரக்டரில் நடிக்கிறார். இதில் அட்டகத்தி தினேஷ், நந்திதா நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கம்புலி நடிக்கிறார்கள். தாமு முறையாக அறிமுகமாகும் படம் இது.