சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
விஜய் தொலைக்காட்சி, விஜய் சித்திரம் என்ற நிகழ்ச்சியை நாளை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணிக்கு இது ஒளிபரப்பாகும். பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை அல்லது நாவலை ஒரு திரைப்படத்தின் தரத்தில் படம்பிடித்து இரண்டு மணிநேர திரைப்படமாகவே ஒளிபரப்புகிறார்கள். நாளை முதல் அடுத்த 7 வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் கதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது வருமாறு:
1.பாயம்மா: மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் பெண், தன் மகள் இன்னொரு மதத்தவரை காதலித்து அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கும்போது அவர் என்ன செய்கிறார் என்கிற கதை.
2. இரண்டாம் ஆதாம்: ஒரு நடுத்தர வயது பெண் தனது கணவரையும் இந்த சமூகத்தையும் எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற கதை.
3. மாரி: அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ஒரு இளம் பெண் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறாள் என்கிற கதை.
4. தவளைக் கண்ணன்: பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருப்பவர்களில் ஒருவன் அரசியல்வாதியாகிறான். இன்னொருவன் அவனது செயலாளர் ஆகிறான். அதன் பிறகு அவர்கள் நட்பு எப்படி இருக்கிறது என்கிற கதை.
5. கணேஷ் வசந்த்: எழுத்தாளர் சுஜாதாவின் கதை மாந்தர்களான கணேசும், வசந்தும் ஒரு முக்கிய வழக்கில் எப்படி துப்பறிகிறார்கள் என்கிற கதை.
6. அந்த ஒரு நிமிடம்: இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.
7. பஞ்சாபகேசன் தேவசகாயம்: ஊட்டியில் உள்ள காப்பி எஸ்டேட்டில் நடக்கும் ஒரு கொலையை துப்பறியும் கதை.