ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
ராதிகா நடித்த அண்ணாமலை, சித்தி தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர், அதையடுத்து மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார். வம்சம் தொடரை முதலில் இயக்கினார். பின்னர் கதை விசயத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். அதையடுத்து, இனிமேல் சீரியலே இயக்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார். ஆனால் இப்போது மறுபடியும் அவர் சீரியல் பக்கம் வந்து விட்டார். தற்போது ஆதிரா என்ற தொடரை இயக்கி வருகிறார். சீரியல்கள் வழக்கம்போல் அதாவது அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்கும் கதைக்களத்தில் இருந்து மாறி புதிய பாணிக்கு வர வேண்டும் என்று கூறி வந்த சி.ஜே.பாஸ்கர், இந்த ஆதிரா சீரியலை, த்ரில்லர், ஹாரர் கதையில் இயக்கி வருகிறார். மேலும், பெரும்பாலும் மெகா சீரியல் குழுவினர் சென்னையை விட்டே வெளியேற தயங்கி வரும் நிலையில், இவரோ, ஆதிரா சீரியலை கேரளா சென்று படமாக்கி வருகிறார். ஹாரர் கதை என்பதால் அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வரும் சி.ஜே.பாஸ்கர், சினிமாவுக்கு இணையாக இந்த சீரியலின் காட்சிகளிலும், லொகேசன்களிலும் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்.