தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
பாசமலர் தொடரில் நடித்து வந்தவர் லட்சுமி விஸ்வநாத். அவரது நடிப்பும் கேரக்டரும் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அதிலிருந்து விலகி மலையாள சீரியலுக்கு சென்று விட்டார். இங்கு ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கு தொடரில் நடித்தார்.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 7ம் உயிர் தொடரில் நடிக்க வந்திருக்கிறார். இதிலும் அவருக்கு முக்கிய கேரக்டர். "பாசமலர் தொடரில் இருந்து ஏன் விலகினேன் என்பது இப்போது தேவையில்லாதது. மலையாளத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் அழகர், 7ம் உயிர் திகில் தொடர் அதில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அழைத்ததால் மீண்டும் வந்திருக்கிறேன். மீண்டும் தமிழில் கவனம் செலுத்த இருக்கிறேன். இதற்காக தமிழ் கற்று வருகிறேன். கேரளாவில் பட்டப்படிப்பும் படித்து வருகிறேன். படித்துக் கொண்டே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். திகில் தொடரில் நடிப்பதால் இரவில் தூங்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு 7ம் உயிரில் காட்சி அமைப்புகள் இருக்கிறது" என்கிறார் லட்சுமி விஸ்வநாத்.