ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி மற்றும் குணசித்திர நடிகை கோவை சரளா செல்லமே செல்லம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டி சுட்டி நிகழ்ச்சி போன்றது அதில் குழந்தைகள் மட்டும் கலந்து கொள்வார்கள். இதில் குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொள்வார்கள். கோவை சரளா காமெடியாகவும், ஜாலியாகவும் நிகழ்ச்சியை நடத்துவார்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து செல்லமே செல்லம் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறது சரிகம நிறுவனம். இதன் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. "சரிகம நல்ல தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் செல்லமே செல்லம் குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரு சேர கவர்ந்துள்ள நிகழ்ச்சி. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறோம்" என்றார் சரிகம நிறுவனத்தின் துணை தலைவர் பி.ஆர்.விஜயலட்சுமி.