ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ | ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து | கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே |
தென்னிந்திய சினிமாவை பெரிய அளவில் கலக்கியவர் ரம்யாகிருஷ்ணன். முக்கியாக ரஜினியுடன் அவர் நடித்த படையப்பா அவரது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல் படம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மிரட்டலாக அந்த படத்தில் நடித்திருந்தார் அவர். ஆனபோதும் திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், சின்னத்திரைக்கு வந்து விட்ட ரம்யா கிருஷ்ணன், தங்கம் சீரியலை தயாரித்து லீடு ரோலில் நடித்தார். அதற்கு நேயர்கள் மத்தியில் ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதையடுத்து இப்போது வம்சம் என்ற தொடரையும் தயாரித்து நடித்து வருகிறார். மேலும், தான் நடிக்கிற காலத்தில் நடிப்பதோடு நிறுத்திக்கொண்டு வந்த அவர், தற்போது தயாரிப்பாளராகியிருப்பதால், தான் வெளியிடங்களுக்கு செல்லும்போது தனது சீரியல்களில் நடிப்பதற்கேற்ற குடும்பப்பாங்கான முகம் கொண்ட பெண்கள் தென்பட்டால் அவர்களிடம் நடிக்க விருப்பம் உள்ளதா? என்று கேட்டு, அவர்கள் விரும்பும்பட்சத்தில் தனது சீரியலில் நடிக்க சான்ஸ் கொடுத்து வருகிறாராம்.