தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
1985ல் ஆண்பாவம் என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தவர் ஆர்.பாண்டியராஜன். அதன்பிறகு பல படங்களை இயக்கியவர், பின்னர் பாட்டி சொல்லைத்தட்டாதே படத்திற்கு பிறகு பெரிய ஹீரோவாகவும் வலம் வந்தார். குறிப்பாக, தன்னை விட உயரமான கெளதமி, ஊர்வசி, குஷ்பூ உள்ளிட்ட நடிகைகளுடனெல்லாம் டூயட் பாடினார் பாண்டியராஜன். அப்படி நடித்த படங்களும் வெற்றி பெற்றதால் அந்த சென்டிமென்டை பின்னர் தொடர்ந்து வந்தார் அவர். ஆனால் ஹீரோ மார்க்கெட் சரிந்த பிறகு சமீபகாலமாக வில்லன் மற்றும கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். ஆனால் இதுவரை அவருக்கு எத்தனையோ சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் சென்றபோதெல்லாம் மறுத்து வந்தவர், தற்போது ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் என் தங்கை மெகா தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த சீரியலை மங்கை ஹரிராஜன் இயக்குகிறார். மேலும், சினிமாவில்தான் பாண்டியராஜனுக்கு ஜோடியாக அவரை விட உயரமான ஹீரோயினிகள் நடித்தார்கள் என்றால், இந்த என் தங்கை சீரியலிலும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கங்கா 5.9 அடி உயரமாம். இது எதேச்சையாக நிகழ்ந்ததாம். ஆக, பாண்டியராஜனே விட்டாலும் இந்த உயரமான நடிகை சென்டிமென்ட் அவரை விடாது போல் தெரிகிறது.