ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த 2014ம் ஆண்டு இந்திய சின்னத்திரை சேனல்களின் விளம்பர வருமானம் 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இது அதற்கு முந்தைய 2013ம் ஆண்டை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் கூடுதலாகும். இந்த தகவல் கே.பி.எம்.ஜி ஆண்டறிக்கையில் வெளியாகி உள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தொலைக்காட்சி வருமானத்தில் இந்தியா உலகில் 2வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருப்பது சீனா. விளம்பர துறையின் வளர்ச்சிக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பங்கு முக்கியமானது. இனிவரும் காலங்களில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குதுறையின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகப்பெரிய காரணமாக அமையும். சென்ற ஆண்டு தொலைக்காட்சி துறையின் ஊடுருவல் 61 சதவிகிதமாக இருந்தது. இனிவரும் ஆண்டுகளில் விளம்பர வருமானத்தின் வளர்ச்சி விகிதம் 15.6 சதவிகிதமாக இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் 2019ம் ஆண்டில் தொலைக்காட்சிகளின் விளம்பர வருமானம் 97 ஆயிரத்து 500 கோடியாக அதிகரிக்கும். தொலைக்காட்சிகளில் சேனல் இணைப்பு வருவாயும் ஆண்டுக்கு 16 சதவிகிதம் உயரும்.
மத்திய அரசு பண்பலை வானொலி நிலையங்களை ஊக்குவித்து வருகிறது. புதிய வானொலி நிலையங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் வானொலி விளம்பர வருவாயும் கணிசமாக உயரும். நடப்பு நிதி ஆண்டில் ஊடக துறையின் மொத்த வருமானம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 கோடியாக இருக்கும். இவ்வாறு கே.பி.எம்.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.