தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்திய ரிஷி அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சின்ன பிரேக் விட்டார். இப்போது மீண்டும் கேம் ஷோ மூலம் திரும்பியிருக்கிறார். சூப்பர் சேலன்ஞ் என்ற கேம் ஷோவை கவிதாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார். இது சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கான நிகழ்ச்சி. அவர்களை மூன்று பேர் கொண்ட அணியாக பிரித்து பல போட்டிகளை நடத்துகிறார். திரைப்பட நடிகர், நடிகைகளின் சிறுவயது போட்டாவை காட்டி அவர் யார் என்று கேட்பது, ஒரு ஹிட் சினிமா பாட்டை கேட்டு அதனை மற்றவர்களை கண்டுபிடிக்க வைப்பது, ஒரு தலைப்பைச் சொல்லி அதற்கு படம் வரைய சொல்வது, ஒருவரின் எடையை சரியாக கணிக்கச் சொல்வது என விதவிதமான போட்டிகளை நடத்துகிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு கணிசமான தொகை பரிசாக வழங்கப்படுகிறது.