ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொதுவாக மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கில் தனி மவுசு உண்டு. இதனை பெரும்பாலும் ஆண் சமையல்கலை நிபுணர்களே நடத்துவார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் பெண் சமையற்கலை நிபுணர்களான ஸ்ரீ பெரிய கருப்பன் மற்றும் கலா ஆகியோர் கே டூ கே ரசிக்க ருசிக்க என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதில் ஸ்ரீ வெளிநாட்டில் சமையல்கலை படிப்பு முடித்து திரும்பியவர், கலா இந்திய சமையல்கலை நிபுணர்.
இவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஸ்ரீ ஒரு வெளிநாட்டு சமையல் பற்றி செய்து காட்டி அறிமுகப்படுத்துகிறார். வெளிநாட்டு உணவு முறைகள் பற்றியும், அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார். கலா இந்தியாவின் பல்வேறு மாநில பாரம்பரிய உணவு வகைகளையும், அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நிகழ்ச்சி மதியம் ஒரு மணிக்கு ஒளிப்பாகிறது.