ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
யூ தி எமிடோன் ஆஃப் லவ் என்ற இசை ஆல்பத்தை இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் உருவாக்கி உள்ளார். காதலை வெவ்வேறு கோணங்களில் சொல்லும் 6 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு பாடலை டாக்டர். அனிருத்தும், அல் ருபியானும் பாடியுள்ளனர்.
மீதியுள்ள 5 பாடல்களை விஜய் டிவி சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களான சவுந்தர்யா, சாய் விக்னேஷ், நித்யஸ்ரீ, வைஜயந்தி, முகமது ரிஸ்வான், மற்றும் திவாகர் பாடி உள்ளனர். இதில் சவுந்தர்யா ஜாஸ் வகை பாடலையும், மேற்கத்திய ஸ்டைல் மெலடி பாடலை நித்யஸ்ரீயும், காதலின் ரவுத்திரம் சொல்லும் பாடலை முகமது ரிஸ்வானும், மெலடி பாடலை நித்யஸ்ரீயும், பாடி உள்ளனர். இந்த ஆல்பம் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள தியேட்டரில் வெளியிடப்பட்டது.