Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

டி.வி., ரியாலிட்டி ஷோவில் நிர்வாண நடனத்தால் பரபரப்பு

27 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

டி.வி.,க்களில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதும், ஆட்டம் போடும் பெண்களை ஆபாசமாக வர்ணிப்பதும் டி.வி., சேனல்களுக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து, இன்று விஸ்வரூபமாக வளர்ந்திருக்கும் இந்த புது கலாச்சாரத்தில் சமீபகாலமாக குழந்தைகளும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் சினிமா திரையில் தோன்றும் கவர்ச்சி நடிகைக்கு நிகராக குழந்தைகளை மேடையில் ஆட விட்டு ரசிக்கிறார்கள். இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திர சின்னத்திரை வட்டாரத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை அரை நிர்வாண ஆட்டம் போட வைக்கும் தனியார் டி.வி., சேனல்கள் மீது ஆந்திராவை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் மனித உரிம‌ை கமிஷனில் புகார் செய்தார். அதில், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனியார் டி.வி.க்கள் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இது பிஞ்சு உள்ளங்கள் மனதில் விஷ கலாசாரத்தை பரப்புவதாக உள்ளது. தனியார் டி.வி.க்கள் தங்களது நிகழ்ச்சியை பிரபலப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதை விட்டுவிட்டு குழந்தைகளை அலங்கோலமாக்கி ஆட வைப்பது நல்லதல்ல. இது அந்த சிறுமிகளின் எதிர் காலத்தை கடுமையாக பாதிக்கும். பெற்றோர்களும் டி.வி. சானல்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை ஆட விடுகிறார்கள். எனவே குழந்தைகளை நிர்வாணமாக ஆட விடும் டி.வி.சானல் உரிமையாளர்கள், பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

சின்னத்திரை உலகத்தையே பரபரக்க வைத்த இந்த புகார் குறித்து ஆந்திர மனித உரிமை கமிஷனர் சுபாஷன் ரெட்டி விசாரித்தார். அப்போது அரை நிர்வாண நடனம் ஆடிய குழந்தைகளின் பெற்றோர் மற்றும் டி.வி., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சுபாஷன் ரெட்டி கூறுகையில், டி.வி., சானல்களில் குழந்தைகளை அரை நிர்வாணமாக ஆட விடுவது குற்றமாகும். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. குழந்தைகளை வலுக்கட்டாயமாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் பெற்றோர் ஆட விடக்கூடாது. இது குழந்தைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். இனியும் பெற்றோரும், டி.வி. சேனல் நிர்வாகிகளும் குழந்தைகளை அலங்கோலப்படுத்தி ஆடவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் திருந்த வேண்டியது தனியார் டி.வி., சேனல்களா அல்லது டி.வி., மோகத்தால் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் ஆபாச ஆட்டம் போடவைக்கும் பெற்றோர்களா?

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Manickam - Erode,இந்தியா
01 மார், 2011 - 08:59 Report Abuse
 Manickam Thangaludaiya tv channela vilambarapaduthavum,channel ratingai eathikavum ippadi seiyarathu nallathillai.
Rate this:
karan - VPM,இந்தியா
28 ஜன, 2011 - 12:23 Report Abuse
 karan VERI GOOD
Rate this:
கொடுமையடா சாமி - 123,ஐக்கிய அரபு நாடுகள்
10 அக், 2010 - 23:16 Report Abuse
 கொடுமையடா சாமி ஆட்சியாளர்களின் சேனல் களிலே இது போல அட்டுழியம் இதை தட்டி கேட்க நாதி இல்லை கொடுமை கொடுமை யனு கோவிலுக்கு போனால் அங்கு அதை விட பெரிய கொடுமை தலைவிரி கோலமாய் இருக்கிறதை போல பூனைக்கு மணி கட்டுவது யார் ?
Rate this:
03 அக், 2010 - 12:43 Report Abuse
  எஸ் .முருகேஷன் நாடார் குழந்தைகளை மட்டும் இல்லாமல் இப்படி ஆடும் அனைவரையுமே கவேர்மென்ட் தடை செய்ய வேண்டும்
Rate this:
ammiya - denhelder,நெதர்லாந்து
26 செப், 2010 - 01:44 Report Abuse
 ammiya இது எப்போதோ மக்களின் பார்வைக்கு வர வேண்டிய விஷயம்:ஆனால்,இப்போ சரி வெளிவந்துவிட்டதே.ஆந்திராவில் மட்டுமல்ல தமிழ் டிவிக்களில் நடக்கும் நிகழ்சியும் அப்படிதானே!!!! முதல் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.அடுத்து;ஒரு குழந்தை தோற்றுப் போய்,அப்போட்டியில் இருந்து விலக்கப்பட்டால்,அந்தப் பிள்ளையின் மனம் மிகவும் பாதிக்கப்படும்.இது பெற்றோர்களின் டிவி மோகம் மட்டுமல்ல,பணத்தாசையும் கூட.அதுதான் தங்களின் பிள்ளைகள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை,இப்படிப் பணம் வந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்.முதலில் அவர்களை இதிலிருந்து வெளிக் கொண்ணரனும்...அப்போதான் எல்லாம் சரிவரும்.ஆனால் முடியுமாமா மா மா ???????
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in