யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
சினிமாவை விட சின்னத்திரை சீரியல்கள்தான் பெஸ்ட் என்று இரண்டு திரைகளிலும் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரமான நடிகை தீபா வெங்கட் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட். ஏகப்பட்ட சீரியல்களில் இவரது முகம் பளீச் அறிமுகம். சிலபல சினிமாக்களிலும் தலை காட்டியிருக்கிறார். சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல சினிமாவிற்கு கொடுப்பதில்லையே என தீபாவிடம் கேட்டால் படபடவென பட்டாசுபோல வெடித்து பேசுகிறார். அவரது பேட்டி:-
சினிமாவில் ஒரு படத்தில், ஒரு ரோலில் நடித்தால் அடுத்து வரும் 10 படங்களிலும் அதே ரோல்தான் கிடைக்கும். படங்களில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்த கதை படத்தில் 2 சீனில்தான் நடித்தேன். ஆனால் எனக்கு அது மன நிறைவை தந்தது. அடுத்து வாடா படத்தில் சுந்தர் சி.யுடன் தங்கச்சி ரோல் பண்ணிருக்கேன். தில், உள்ளம் கொள்ளை போகுதே, ஜெயம் கொண்டான் போன்ற படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. சினிமாவை விட சீரியல்களில் நல்ல ரோல் கிடைக்கிறது. நிறைய கேரக்டர்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் சீரியல்தான் பெஸ்ட் என சொல்வேன். எனது திருமணம் அநேகமாக இந்த வருடத்தில் இருக்கும். காதல் திருமணம் செய்தாலும் என் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும், என்று சொல்லும் தீபா வெங்கட் சமீப காலமாக ஒரு புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார். அது ரேடியோ தொகுப்பாளர் அவதாரம்தான்.
அதேபோல இவரைப் பற்றிய இன்னொரு சங்கதி நிறைய படங்களில் முன்னணி நாயகிகள் பலருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பது. கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரனுக்கும், குரு படத்தில் வித்யாபாலனுக்கும் குரல் கொடுத்திருக்கும் தீபா, விரைவில் வெளிவரவுள்ள முறியடி, முரட்டுக்காளை, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களின் நாயகிகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறாராம்.