சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த கமல்ஹாசனுக்கு பொன்விழா நடத்தி கவுரவித்த விஜய் டி.வி.,யில் கமல்ஹாசன் பங்குபெறும் நிகழ்ச்சி வரப்போகிறது. சின்னத்திரை உலகில் நிலவும் போட்டிகளுக்கு மத்தியில் எப்போதுமே புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி., கமல்ஹசன் பொன்விழாவை முன்னிட்டு கமல்50 என்ற நிகழ்ச்சியை நடத்தி பெரும் வரபேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி கமல்ஹாசனையும் ரொம்பவே கவர்ந்து விட்டது போல! அதனால்தானோ என்னவோ... விஜய் டி.வி., விரைவில் நடத்தவிருக்கும் புதிய ஷோவில் கமல்ஹாசன் பங்கேற்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். பங்கேற்பு என்றால் கெஸ்ட்டாக அல்ல. இந்தியில் அமிதாப் பச்சன் நடத்திய குரோர்பதி போன்று, தமிழில் கமல்ஹாசன் முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சியை வழங்கப்போகிறாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.




