சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
விஜய் டிவியில் சூர்யா நடத்தி வந்த "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தை தொகுத்து வழங்கப்போகிறார் பிரகாஷ்ராஜ். இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சி எதனையும் தொகுத்து வழங்காத பிரகாஷ்ராஜ் முதன் முறையாக களத்தில் இறங்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார், மலையாள "சால்ட் அண்ட் பெப்பர்" படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து இயக்குகிறார், ராதாமோகன் இயக்கத்தில் "கவுரவம்" படத்தை தயரிக்கிறார். இத்தனை பிசியான ஷெட்யூலுக்கும் இடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நேயர்களுக்கு கோடி கிடைக்கிறதோ இல்லையோ, பிரகாஷ்ராஜுக்கு கிடைத்து விடுகிறது சில கோடி. இனி விஜய் டிவியில் அடிக்கடி செல்லத்தை பார்க்கலாம்.