ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரையுலகில் அறிமுகமாகும் புதுமுகங்களை வரவேற்பதில் முதலிடத்தில் இருக்கும் ராஜ் டி.வி., இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களிலிருந்து சிறந்த அறிமுக கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுள் முதல் மூன்று திறமைசாலிகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறது!
2012-ம் ஆண்டின் அறிமுக கலைஞர்கள் பட்டியலில் இருந்து ராஜ் டி.வி. ரசிகர்கள் முதல்சுற்றில் தேர்ந்தெடுத்துள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டுள்ள ராஜ் டி.வி. நிறுவனம், அதிலிருந்து 3 சிறந்த அறிமுக நடிகர்கள், 3 சிறந்த அறிமுக நாயகிகள், 3 சிறந்த அறிமுக இயக்குனர்கள், 3 சிறந்த அறிமுக இசையமைப்பாளர்கள், 3 சிறந்த அறிமுக காமெடி நட்சத்திரங்கள், 3 சிறந்த அறிமுக தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் ராஜ். டி.வி ரசிகர்களுக்கே வழங்கியுள்ளதுடன், இது சம்பந்தமான விளம்பரங்கள், ஓட்டுப்பெட்டி மற்றும் ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய மெகா சைஸ் வாகனம் ஒன்றையும் தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்து, சுமார் 2 லட்சம் ராஜ் டி.வி. நேயர்களிடம் ஓட்டுபதிவுகளையும் பெற்று, அதிலிருந்து மேற்கண்ட ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று சிறந்த அறிமுக கலைஞர்களை தேர்ந்தெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மெரீனா, எப்படி மனசுக்குள் வந்தாய், ஒரு கல் ஒரு கண்ணாடி, அட்டக்கத்தி, நான், கும்கி, மை, ராட்டினம், சுந்தரபாண்டியன், போடா போடி, தோனி, 3, சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மதுபானக்கடை, உடும்பன், காதலில் சொதப்புவது எப்படி, கலகலப்பு என்று 2012ம் ஆண்டில் வெளிவந்த சுமார் 42 தமிழ்த் திரைப்படங்களில் இருந்து அறிமுக கலைஞர்கள், இந்த போட்டியில் பங்கு பெற்றிருப்பதும், அவர்களில் மேற்படி தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் சிறந்த மூவரை ராஜ் டி.வி. நேயர்கள் தேர்ந்தெடுக்க இருப்பதும், ரசிகர்கள் தேர்வுக்கு பின்னர் விருதுக்குரிய அறிமுக கலைஞர்களை கே.பாக்யராஜ் தலைமையிலான நடுவர் குழுவினர் தேர்ந்தெடுக்க இருப்பதும், இந்த விருது விழாவிற்கு "முதல் மூவர்" பரிசளிப்பு விழா என்று ராஜ் டி.வி பெயர்சூட்டி வரும் பிப்ரவரி-23ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் மிகப்பிரமாண்டமாக இவ்விழாவினை நடத்த இருப்பதும் கோலிவுட் புதுமுகங்கள் - அறிமுகங்கள் இடையே உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தந்துள்ளது!
சிறந்த அறிமுக கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் ராஜ் டி.வி ரசிகர்களுக்கும் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், இருபதைந்தாயிரம் என்று மூன்று பரிசுகள் வழங்கப்பட இருக்கும் இந்த முதல்மூவர் விழாவிற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமை ஏற்பது ஹைலைட்!