வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாட்டிய நிகழ்ச்சி, தக திமி தா. இந்தியாவின் சாஸ்திரிய நடன கலைக்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தேடித்தந்த தக திமி தா நிகழ்ச்சி, இனி வரும் வாரங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள சாஸ்திரிய நடனங்களை கொண்டாடுகிறது. கதகளி, மோகினியாட்டம், ஓடிசி, சிம்ம நந்தினி, குச்சிப்புடி போன்ற பல்வேறு வித்தியாசமான நாட்டிய விருந்தை வரும் வாரங்களில் ருசிக்கலாம். 450 வாரங்களை கடந்து தொடரும் இந்த நிகழ்ச்சி ராப்பா விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதது. இந்தியாவில் வெவ்வேறு நாட்டியக்கலைகளில் புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தக திமிதா நாட்டிய கொண்டாட்டத்தை ஸ்ரீசித்ரா தொகுத்து வழங்குகிறார். ராதிகா சூரஜித் இயக்கத்தில் உருவாகும் இந்நிகழ்ச்சி, நேயர்களை கவரும் வகையில் பல புதுமைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.