தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பார்த்த ஞாபகம் இல்லையோ தொடரில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை குஷ்புவின் கதாபாத்திரம் மேலும் மெருகேற்றப்பட்டு புதுப்பொலிவுடன் தோன்றவுள்ளார். பல்வேறு திருப்பங்களுடன் வரவிருக்கும் இத்தொடர் 150 எபிசோடுகளை தாண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு போதைஊசிக்காக தன் சொந்த மனைவி ஓவியாவையே கொலை செய்ய வருகிறான் கார்த்திக். தன்னை கொலை செய்ய வந்தது தன் கணவன்தான் என்று தெரிந்த ஓவியா அதிர்ச்சியடைகிறாள். தன் கணவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதை தெரிந்து கொள்கிற அவள், அதனால்தான் தன்னை கொலை செய்ய வந்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்கிறாள். கணவன் தனது எதிரி ரகுநாத்தின் கைப்பாவையாக இயங்கி வருகிறான் என்பதை அறிந்து தன் கணவனை ரகுநாத்திடமிருந்து மீட்க முயற்சிக்கிறாள். ரகுநாத்துடனான அவள் போராட்டம் வென்றதா என்பது தொடரும் விறுவிறு காட்சிகள், என்று பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.