Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்!

15 டிச, 2012 - 10:30 IST
எழுத்தின் அளவு:

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமுத்துவும் முன்னணியில் இருக்கும் இரு வார இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இருவருமே ஒருவரை ஒரு காரசாரமாக தாக்கி எழுதி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு "சினிமா பாடகராக என்ற செய்ய வேண்டும்?" என்ற கேள்விக்கு இளையராஜா அளித்த பதில் "இசை அமைப்பாளருக்கு உதவியாளர் போல எடுபிடி வேலை செய்ய வேண்டும், யாரும் கேட்டால் இசை அமைப்பாளர் என் நண்பர் என்று சொல்ல வேண்டும். தன் பெயரில் மன்றம் வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு விளம்பரம் வைக்க வேண்டும். அடிக்கடி புத்தகம் வெளியீட்டு விழா நடத்தி மற்றவர்கள் புகழ்வதை கேட்டு மகிழ வேண்டும். பணம் செலவு செய்து நிறைய விருதுகளை வாங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இது மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி எழுதப்பட்டதாகும்.

சமீபத்தில் வைரமுத்துவிடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து "ஒரு முறை ஜெயகாந்தன் தன் மகன் திருமணத்தை என் திருமண மண்டபத்தில் நடத்தினார். அந்த திருமண அழைப்பிதழை ஒரு இசை அமைப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். பத்திரிகையில் மண்டபத்தின் பெயரை படித்த இசை அமைப்பாளர் நான் அந்த மண்டபதுக்கு எப்படி வருவது என்று கேட்டிருக்கிறார். உடனே வராதவருக்கு எதற்கு அழைப்பு என்று அந்த பத்திரிகையை பிடுங்கி வந்து விட்டார் ஜெயகாந்தன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். வைரமுத்து குறிப்பிடும் இசை அமைப்பாளர் இளையராஜாதான் என்பது அனைவருக்கும் தெரியும்.  "சிலர் மறைமுகமாக உங்களை தாக்கி வருகிறார்களே?" என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து "கர்வத்தின் உச்சத்தை தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிர குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது, குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட சிகிச்சை தருவதே சிறந்தது" என்று கூறியிருக்கிறார். அதோடு என்னை மறைமுகமாக தாக்குபவர்களுக்கு சைகோசிஸ் என்ற மனநோய் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மோதல் முற்றி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படித் தாக்கிக் கொள்வார்களோ தெரியவில்லை.

இந்த பங்காளிச் சண்டைக்கு முடிவே இல்லையா?

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Chanakyah - Cambridge ,யுனைடெட் கிங்டம்
04 மார், 2013 - 16:13 Report Abuse
Chanakyah மேன்மக்கள் மேன்மக்களே மற்றவர்களுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தான். என்ன செய்வது. ரமணரும் ராமகிருஷ்ணரும் தங்கள் வழிகாட்டிகள் என்று ஒப்புக்கு சொன்னால் மட்டும் போதுமா? வாழ்ந்து காட்ட வேண்டும் அல்லவா
Rate this:
www.myoor.com - chennai ,இந்தியா
16 டிச, 2012 - 23:23 Report Abuse
 www.myoor.com எதனால் இந்த வரட்டு பிடிவாதம் .
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
16 டிச, 2012 - 20:54 Report Abuse
 அசோக் குமார் இசைக்கு வரிகள் தேவையில்லை. வரிகளுக்கு இசை தேவை. நல்ல இசை இல்லாமல் எந்த ஒரு எழுத்தாளரின் பாடலும் எடுபடாது. இளையராஜா அவர்களுக்கு பிறகு வைரமுத்துவின் எந்த பாடல் எப்பவும் ரசிக்கும்படி இசை அமைக்க பட்டுள்ளது யாராவது சொல்லுங்களேன். (எப்பவும் எப்பவும் ஒரு வாரதிர்க்கல்ல)
Rate this:
Krish - Madurai,இந்தியா
18 ஆக, 2013 - 15:16Report Abuse
Krishஅசோக் குமார் அவர்களே, வைரமுத்து அவர்கள் இளைய ராஜாவை விட்டு விட்டு வந்த பின்னர்தான் அதிகம் புகழ் பெற்றார். அதற்க்கு பல பாடல்கள் சான்றுகள் உள்ளன. அதே போல் இளையராஜா போன்று ஒரு திறமையான இசையமைப்பாளரை எங்கும் பார்க்க முடியாது....
Rate this:
jaydevi - colombo,இலங்கை
16 டிச, 2012 - 12:15 Report Abuse
 jaydevi athu eapatiya இருவரும் சம்பதிதுவிடர்கள்.இன்னிமேல் காமெடி பண்ணவேண்டியது தான் அவ்வலோவோ திறமை இருத்தும் வலை இல்லை..இருவருக்குமே நாகரிகம் தெரியாது
Rate this:
PANDI - singapore,இந்தியா
16 டிச, 2012 - 08:40 Report Abuse
 PANDI உண்மையான கலைஞனுக்கு இதுஒன்றும் பாதிப்பு இல்லை எத்தனைபேர் இளையராஜாவின் கர்வத்தை ஒப்புக்கொள்கிறீர்கள்?
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in