Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்டு முழுவதும் ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்: லதா ரஜினி அறிவிப்பு

12 டிச, 2012 - 20:18 IST
எழுத்தின் அளவு:

ரஜினியின் 63வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினி ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தன் கணவர் பிறந்த நாளுக்கு தானும் ஒரு சிறப்பு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்த பரிசு அவரை புகழ்ந்து அவரே எழுதி, இசை அமைத்திருக்கும் ஒரு பாடல். இந்தப் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பொது மக்கள் முன்னிலையில் நடந்தது. பாடலை நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். பின்னர் பாடலுக்கு ஆஷ்ரம் பள்ளி மாணவிகள் நடனம் ஆடினர். அவர்களுடன் இணைந்து லதா ரஜினியும் உற்சாகமாக நடனமாடினார்.

அதன் பின்னர் அவர் அந்த விழாவில் பேசியது வருமாறு: கடந்த பல வருடங்களாக நான் இசை அமைத்து வருகிறேன். எல் மியூசிக் என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறேன். என் கணவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் ரஜினி-25 என்ற ஆல்பத்தை வெளியிட்டேன். இப்போது 12.12.12 என்ற சிறப்பான நாளில் அவர் பிறந்த நாள் வந்திருப்பதால் அவருக்கு என் அன்புப் பரிசா இந்த பாடலை வெளியிடுகிறேன். இன்று முதல் ஒரு வருடத்துக்கு அவரின் பிறந்த நாளை பல்வேறு வகையில் கொண்டாட இருக்கிறோம். பல மக்கள் சேவைகளை செய்ய இருக்கிறோம். அதன் முதல் கட்டமாக அவரது பிறந்த நாள் அன்று அவரது 62 வயது நிறைவைக் குறிக்கும் வகையில் ராஜன் கண் மருத்துவமனையுடன் இணைந்து 62 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். 62 பேருக்கு காண்டிராக்ட் ஆபரேஷன் செய்ய உள்ளோம். தொடர்ந்து 62 கிராமங்களில் "சூப்பர் ஸ்டார் சூப்பர் விஷன்" என்ற தலைப்பில் கண்சிகிச்சை முகாம்களை நடத்த இருக்கிறோம். இதுபோன்ற பல நல்ல காரியங்களை இந்த ஆண்டு முழுவதும் செய்ய இருக்கிறோம். நான் புதிதாக கட்டிவரும் கல்வி வளாகத்திற்கு "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வளாகம்" என்று பெயர் சூட்ட  இருக்கிறோம். என்றார் லதா ரஜினி.

2013 சூப்பர் ஸ்டார் ஈயர்...

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

சந்துரு - PARIS,பிரான்ஸ்
30 டிச, 2012 - 18:46 Report Abuse
 சந்துரு ஹலோ Bangalore ரியாலிட்டி, அமரர் எம்.ஜி.ஆர். என்றுமே மலையாளியாக நடந்து கொண்டது இல்லை. படித்ததும் பேசியதும் வாழ்ந்ததும் தொழில் செயததும், லாபத்தை கொடையாக கொடுத்ததும் தமிழர்களுக்கு தான். கடைசி வரை உணர்வாலும் உள்ளாத்தாலும் தமிழனாக தான் வாழ்ந்தார், தமிழனுக்குதான் குரல் கொடுத்தார். ஆனால் என்று திரு ரஜினிகாந்த் தமிழனாக வாழ்ந்தார்? அதுமட்டுமல்ல அரசியலுக்கு வரேன் வரேன் என்று அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி கொண்டு வருகிறார்.....
Rate this:
Moin Ahmed - Chennai,இந்தியா
20 டிச, 2012 - 07:31 Report Abuse
Moin Ahmed இங்கே புகையுற பல பேருக்கு ரஜினி தமிழன் இல்லைன்றதால தான் ஒரு மறைமுகமான கோவம்....அவங்க எல்லாம் M . G R ஒரு மலையாளின்றத மறந்துட்டாங்க.........எல்லாரையும் இந்தியனா பாருங்கய்யா......இன்னும் காட்டு வாசிங்க போல ஜாதி, தமிழ்நுட்டு ....................................அப்புறம் ....நடிப்பூன்ற பேர்ல ஓவராக்ட் பண்ற கமலுக்கு இவர் எவ்வளவோ பெட்டெர்.....................இவரா உங்க கிட்ட வந்து என்னைய நம்புங்க நான் அத பண்றேன் இத பண்றேன்னாரு ..........நீங்களா ஏதாவத கற்பனை பண்ணி உளறாதீங்க ........அவர அவரோட தொழில் செய்ய விடுங்கய்யா
Rate this:
சயம் shabu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19 டிச, 2012 - 17:53 Report Abuse
 சயம் shabu some people giving some comments about rajini he is ceni field actor ok what about mgr
Rate this:
ராஜா - chennai,இந்தியா
13 டிச, 2012 - 21:18 Report Abuse
 ராஜா சும்மா எதாவது பேசவேண்டும் என்று பேசும் அனைவருக்கும் நாங்கள் ரஜினி ரசிகர்கள் சேர்ந்து பாரதியார் பிறந்தநாளை எவ்வளவு சிறப்பாக பயனுள்ளதாக கொண்டாடினோம் என்று ரைட் மந்த்ரா.காம் என்ற வலைத்தளத்தில் போய் பாருங்கள். அதில் வந்த விருந்தினர்களை பாருங்கள். திரு பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள்,திரு நந்தகுமார் அவர்கள் ,திரு இளங்கோ அவர்கள்,திரு முல்லைவனம் இவர்கள் எவ்வளவு பெரிய சாதனையாளர்கள் என்று அந்த வலைதளத்தை பொய் பார்க்கவும் ,சோமசுந்தரம் ,georgia போன்றவர்கள் வாயில் வடை சுடுவதை விட்டு விட்டு எதாவது செய்துவிட்டு அடுத்தவரை குறை கூறவும். உங்களுக்கு ஒருவரை குறை கூறத்தான் தெரியும் தெரியாமல் செய்யும் உதவிகள் எல்லாம் உங்களுக்கு தெரியாது.பாரதி பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று கூறும் எதனை பேர் கொண்டாடினீர்கள் குறைந்தது அவர் படதுக்கவது மரியாதை செய்தீர்களா நாங்கள் செய்தது அந்த ரைட் மந்த்ரா.காம் வலைத்தளத்தில் போய் பாருங்கள் புரியும் .நான் இந்த மாதிரி வேலைவெட்டி இல்லாமல் அடுத்தவரை குறை கொண்டே இருக்கும் கூட்டதிற்கு பதில் சொல்வதில்லை இருந்தாலும் இப்பொழுது சொல்ல வேண்டும் என்று தோன்றியது
Rate this:
தமிழன் - delhi,இந்தியா
13 டிச, 2012 - 14:11 Report Abuse
 தமிழன் நடிகனா பாக்காதிங்க அவங்க பெயர வச்சிக்கிட்டு சேவை செய்றங்கள அத பாராட்டுங்க ப . உங்கள மாறி ஆளுங்க யாரது முடியாதவங்களுக்கு ஹெல்ப் பண்றிங்கள பண்றவங்கள குறை சொல்றதயவது நிறுத்துங்க.... அப்பதான் நாடு திருந்தும் ....
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in