இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
அஜீத்தின் தீனா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜீத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார். காதல் டிராக்கில் போய் கொண்டு இருந்த நடிகர் அஜீத்தை, ஆக்ஷ்ன் டிராக்கில் களம் இறக்கிவிட்டர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜீத்-முருகதாஸ் கூட்டணியில், கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த படம் தீனா. அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தபடத்தின் மூலம் டைரக்டர் முருகதாஸ்க்கும், அஜீத்துக்கும் ஒரு பெரிய பெயர் கிடைத்தது. அதுமட்டுமல்லாது தீனா படத்திற்கு பிறகு தான் அஜீத்துக்கு தல என்ற அடைமொழியும் சேர்ந்தது.
இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கி, அதையும் வெற்றிபடமாக்கியுள்ள முருகதாஸ் மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் அஜீத்தோ விஷ்ணுவர்தன் படம், சிறுத்தை சிவா படம் என்று அடுத்தடுத்த படங்களில் நடிப்பதால் முருகதாஸ்க்கு ஓ.கே., சொல்ல முடியாமல் இருந்து வந்தார். இருந்தாலும் அஜீத்துக்காக தான் காத்திருப்பதாக முருகதாஸ் கூறியதை அடுத்து இப்போது அஜீத்தும், முருகதாஸ் படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.
தற்போது முருகாதஸ் அக்ஷ்ய் குமாரை வைத்து இந்தி துப்பாக்கியை ரீ-மேக் பண்ணும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் அஜீத்தும் விஷ்ணுவர்தன் மற்றும் சிறுத்தை சிவா படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் அவரவர் படங்களை முடித்தபின்னர் தங்களது புதிய படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை ஐயங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தாண்டு இவர்களது படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும் என்றும், விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.