ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லேட்டஸ்ட் ஹீரோயினிகளில் த்ரிஷாவின் தீவிர ரசிகராம் விஷால். அவர் நடித்த படங்களென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரமாகவே மாறி விடும் த்ரிஷா ரொம்ப க்யூட் என்றும் அவரது அழகுக்கு பஞ்ச் வைக்கிறார் நடிகர். மேலும், த்ரிஷாவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. அதற்காக இதற்கு முன்பு நான் நடித்த படங்களுக்கு ஹீரோயினி இன்னும் ஓ.கே ஆகவில்லை என்று டைரக்டர் சொல்லும்போதெல்லாம் த்ரிஷாவுக்கு போன் பண்ணி கேட்பேன். ஆனால் என் துரதிஷ்டம் அவர் அந்த நேரத்தில் வேறு வேறு படங்களில் லாக்காகியிருப்பார். அப்படி இதுவரை அவரிடம் நான்கு முறை கேட்டிருக்கிறேன்.
ஆனால் இந்த சமர் படத்திற்கான கதையே அவன் இவன் படத்தில் நடித்தபோது கேட்டநான், அப்போதே அவரிடம் இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டுவிட்டேன். அவரும் இந்த முறை நாம் டூயட் பாடுவது உறுதி என்று வாக்குறுதி அளித்து இப்போது நடித்தும் கொடுத்து விட்டார். ஏற்கனவே பரிட்சயமான நடிகை என்பதால், மற்ற நடிகைகளுடன் நடித்ததை விட இந்த படத்தில் த்ரிஷாவுடன் ஓரளவு நெருக்கம் காட்டியே நடித்தேன். அதேபோல் அவரும் தயக்கம் இன்றி நெருங்கி நடித்ததால் காதல் காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக வந்திருக்கிறது என்று சொல்லும் விஷால், சமர் படத்தில் நடித்த பிறகுதான் த்ரிஷா ரொம்ப நல்ல நடிகை என்பதை கண்கூடாக உணர்ந்தேன் என்கிறார்.