சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே |
விளம்பரம் என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படம் மூலம் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் ஹீரோ ஆகியிருக்கிறார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், சாவித்திரியின் மகள் வயிற்று பேரன் அபிநய். இவர் விளம்பரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் அவருடன் ஐரா, அட்டகத்தி ஐஸ்வர்யா, தம்பி ராமைய்யா, சுனில் ஷெட்டி, சோனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அபிநய், டேபிள் டென்னிஸ் வீரராக இருந்தவர். இவரை, யங் இண்டியா என்ற தெலுங்கு படத்தில் டைரக்டர் தாசரி நாராயணராவ் அறிமுகம் செய்தார். விளம்பரம் படத்தின் மூலம் அபிநய் கதாநாயகன் ஆகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் டைரக்டர் சூரியநிதி. ஜெம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படம் முழுவதும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்திர ஜெயா ஆகிய இடங்களில் வளர்ந்து வருகிறது.