Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தமிழில் கமாண்டோ ஏகே 47-ஆக வரும் ரெட் டான்!

Hollywood Red dawn movie in tamil
1984ம் ஆண்டு வெளியான படம் ரெட் டான். அப்போதே வசூலையும் குவித்து பல பிரச்சினைகளையும் கிளப்பிய படம். தற்போது அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். டேன் பிராட்லி இயக்கி உள்ளார். இவர் ஸ்பைடர்மேன், இண்டிபெண்டன்ஸ் டே படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிவர். 2000ல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இப்போதுதான் வெளிவருகிறது. க்ரிஸ் ஹென்ஸ்வொர்த், இசபெல் லூக்காஸ், நடித்திருக்கிறார்கள். வாஷிங்டன் நகரத்தின் மீது எதிரிகள் வான்வெளி தாக்குதல் நடத்துகிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் வான் வரின்ஸ் என்ற கொரில்லா போராட்ட குழுவை அமைத்து எதிரிகளை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். தமிழில் புளூ மாட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு "கமாண்டோ ஏகே 47" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Tags »
Hollywood movie, Red dawn, tamil, commando AK 47, ஹாலிவுட் படம், ரெட் டான், தமிழ், கமாண்டோ ஏ.கே.47,
Share  
Bookmark and Share

மேலும் தொடர்புடைய செய்திகள்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in