சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழைப்பொறுத்தவரை டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடன் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் அமலாபால். ஆனால் ஆந்திராவில் அங்குள்ள பிரபல நடிகர்கள் பலருடனும் அவரை இணைத்து தினம் தினம் கிசுகிசுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறதாம். ஆனால் எந்த நடிகர்களுடன் அதிகப்படியான நெருக்கத்தை வைத்துக்கொள்வதில்லையாம் அமலாபால். அதனால் இந்த மாதிரி செய்திகள் எப்படி வெளியாகிறது? என்பதை விசாரித்தபோது, அமலாவை பகைத்துக்கொண்டு சென்ற சில எடுபிடிகளே இந்த மாதிரியான செய்திகளை பரப்பி விட்டது தெரியவந்திருக்கிறது.
இதனால் உஷாராகி விட்டார் நடிகை, இப்போது தன்னைச்சுற்றி ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் இருப்பது தனக்கு ஆபத்து என்று நினைக்கிறார். அதன்காரணமாக, தனது மேனேஜர் தொடங்கி அனைத்து உதவியாளர்களையும் தனது சொந்த மாநிலமான கேரளாவிலிருந்து கொண்டு வந்து வேலை கொடுத்திருக்கிறார். அதில் சிலர் அமலாவின் உறவினர்களாம். இதையடுத்து, இனி தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகள் வெளியாக வாய்ப்பில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் அமலாபால்.