ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி சினேகா பிரிட்டோ இயக்கி வரும் படம் சட்டம் ஒரு இருட்டரை. சினேகாவுக்கு விஜய் சித்தப்பா முறை வேண்டும். ஒரு காலத்தில் தாத்தா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படத்தின் ரீமேக் இது. பேத்தி இயக்க தாத்தா பக்கத்திலிருந்து கண்காணிப்பதோடு ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே என் மகன் விஜய்யை இதில் கவுரவ வேடத்தில் நடிக்க வைக்கிறேன் என்று பேத்திக்கு வாக்கு கொடுத்திருந்தாராம். ஆனால் இதுவரை விஜய் இதில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுக்கவில்லையாம். படப்பிடிப்புக்கு சென்று வாழ்த்தினார், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆனாலும் நடிக்க மட்டும் தயங்குகிறாராம். ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறையில் எஸ்.ஏ.சி கம்பவுண்டர் வேடத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அந்த கேரக்டரிலாவது நடித்து தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அப்பா தயாரிக்கும், இயக்கும் படங்களில் தோன்றுவதில்லை என்ற புதிய பாலிசியை விஜய் எடுத்திருப்பதால் இந்த தயக்கம் என்கிறார்கள். என்றாலும் சித்தப்பா எப்படியும் நடிப்பார் என்ற நம்பிக்கையில் சினேகா இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் கவுரவ வேடத்தில் நடித்து விட்டார். ஆனால் அதை ரகசியமாக வைத்து கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். இதில் எது உண்மை, எது வதந்தி என்று தெரியவில்லை.