Advertisement

சிறப்புச்செய்திகள்

14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் 40 ஆண்டுகள் - பிரபு சாதனை

14 ஏப், 2021 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Prabhu-in-40th-year

தமிழ் சினிமாவை தனது நடிப்பினாலும், வசன உச்சரிப்பினாலும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது வரவினால் சினிமாவில் புதிய சகாப்தம் தொடங்கியது. இவரது இளைய மகன் பிரபு தனது முதல் படமான சங்கிலி படத்திலேயே தந்தை சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார்.. இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி.ராஜேந்தரன் இயக்க, தேவராஜ் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 1982ல் ஏப்., 14ல் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. அந்த வகையில் இவர் திரைத்துறைக்கு வந்து இன்று ஶ்ரீ பிலவ தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதுடன் 40ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

முதல் படத்திலேயே அப்பாவுடன் நடித்தவர், அவருடன் மட்டும் 19 படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், குசேலன், சந்திரமுகி படத்திலும், நடிகர் கமல்ஹாசனுடன் வெற்றி விழா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்திலும் பிரபு நடித்திருந்தார். நடிகர் திலகம் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் இயக்குனர் பி.வாசு. இளைய திலகம் பிரபுவுடன் அதிக படங்களில் இணைந்து பணியாற்றி இயக்கியவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. பிரபுவுடன் அதிகப் படங்களில் இணைந்து நடித்திருக்கிற நடிகைகள் ராதா, குஷ்பு.

இப்போதும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருகிறார். கேரளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இவர் நடித்துள்ள தேசிய விருது பெற்ற மரைக்காயர் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது. இதுதவிர, மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், சாந்தனுவுடன் ராவணக் கூட்டம், பிக்பாஸ் முகெனுடன் வேலன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர கன்னடத்தில் 'த்ரிஷ்யம் 2' படத்திலும், தெலுங்கில் 3 படங்களிலும் மற்றும் மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.

கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். சிவாஜி பட நிறுவனம் தயாரிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் 824 நாட்கள் திரையில் ஓடி சாதனை படைத்துள்ளது. தென்னக திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய இப்படத்தை தயாரித்த பெருமைக்குரியவர் பிரபு ஆவார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நட்டியின் ‛இன்பினிட்டி' படப்பிடிப்பு நிறைவுநட்டியின் ‛இன்பினிட்டி' ... ஹிந்திப் படத்தையும் அறிவித்த ஷங்கர் : 'இந்தியன் 2' கதி என்ன ? ஹிந்திப் படத்தையும் அறிவித்த ஷங்கர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
18 ஏப், 2021 - 23:36 Report Abuse
சிவ.இளங்கோவன் . நாற்பது ஆண்டுகால சாதனை அதில் குஸ்புவிற்காக செய்தது முக்கிய சாதனை .
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
17 ஏப், 2021 - 20:55 Report Abuse
ranjan பிரபு அறிமுகமான நேரத்தில் சிவாஜி விலையில் தள்ளுபடி செய்தார் . சிவாஜி தனியா நடித்தால் ஒரு தொகையும் அதில் பிரபு நடித்தால் விலைக்கு கழிவும் இருந்தது .பிரபு அறிமுகமான நேரம் எல்லாப் படங்களும் சிவா ஜி-பிரபு சேர்ந்தே நடித்திருந்தார்கள் .வெள்ளைரோஜா ´,நீதியின் நிழல் . தீர்ப்பு நீதிபதி சங்கிலி ,இப்படி பல
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
16 ஏப், 2021 - 14:15 Report Abuse
Raman Muthuswamy நடித்த.. நடிக்கும் படங்கள் கைவசம் ஏராளமாக இருக்கலாம்.. அனால்.. சிவாஜி போன்று எப்போதும் மனதில் நிலைக்கும் வண்ணமாக ஒரு படம் கூட இல்லையே அய்யனே துட்டுக்கு பஞ்சம் இல்லாவிடினும் துடி துடிப்பான நடிப்பு .. அமரர் நடிகர் திலகத்தின் திறனில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நாம் பார்க்க வில்லையே ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in