ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அவன் இவன் படத்திற்குப் பிறகு பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரதேசி. இப்படத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. பாடல்கள் அனைத்துமே படத்தின் கதையோடு ஒன்றியே வருவதுபோல் காட்சிப்படுத்தியுள்ளார் பாலா. இப்படத்தின் இறுதிப் பாடலை விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இரண்டாவதாக வந்த பிரகதி பாடியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நவம்பர் 25ம்தேதியான இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு டிசம்பரில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.