சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
பாலா இயக்கத்தில் திரைக்கு வரத்தயாராகி வரும் படம் பரதேசி. இந்த படத்துக்காக அதர்வா, வேதிகா, தன்சிகா அடங்கிய குழு சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக காடு மலைப்பகுதிகளில் முகாமிட்டு நடித்துக்கொடுத்து விட்டு திரும்பியுள்ளனர். ஆக இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடித்துக்கொண்டிருக்கிறார் பாலா. இதையடுத்து படத்தின் ஆடியோ விழாவை நடத்தவும் தயாராகி விட்டார்.
ஆனால் அப்படி விழாவுக்கு தயாராகி வருபவர், படத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளரின் பெயரை ஆடியோ அழைப்பிதழில் போடாமல் விட்டு விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஒளிப்பதிவாளர் செழியன், பரதேசிக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. நீங்கள்கூட இந்த மாதிரி காட்சி வர வேண்டும் என்று சொல்லிவிட்டு சேரில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டீர்கள். ஆனால் நானல்லவா, கல்லிலும் முள்ளிலும் நுழைந்து படமாக்கினேன். அதற்காக நான் பட்ட காயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அப்படிப்பட்ட என்னை கடைசி நேரததில் மறப்பது நியாயமா? என்று பாலாவிடம் ஆத்திரத்தில் வார்த்தைகளை அடுக்கடுக்காக கொட்டியிருக்கிறார். அதன்பிறகுதான் சாரி, எப்படியோ மறந்துட்டேன். பேரை சேர்த்துட்டா போச்சு என்று சொன்னாராம்.
என்றாலும், படப்பிடிப்பில் பட்ட காயங்களை விட, இவர் என் பேரை மறந்தது, மனசுக்குள்ள ரொம்ப பெரிய காயமாயிடுச்சுங்க -என்று சொல்லி புலம்புத்தள்ளி வருகிறார் ஒளிப்பதிவாளர்.