விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். கடந்த 3 மாதத்துக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான படம். ஒரு மாதத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. விபத்தில் பாதிக்கப்படும் ஒருவன் தன் ஒரு வருட ஞாபகத்தை இழந்து விடுகிறான் (ஷார்ட் டைம் மெம்மரிலாஸ்). அதனால் ஏற்படும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லும் படம். படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை பாராட்டியதோடு நீளத்தை குறைக்கச் சொன்னார்கள். படத்தை வாங்க முன்வந்த விநியோகஸ்தர்களும் இதே கருத்தை சொன்னார்கள். தியேட்டர்காரர்கள் நீங்கள் குறைக்காவிட்டால் நாங்கள் குறைத்து விடுவோம் என்றார்கள். அதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது படத்தின் இயக்குனர் பாலாஜி முரளிதரனும் அவரது டீமும் ரூம்போடடு தீவிரமாக யோசித்து 25 நிமிட காட்சிகளை வெட்டி வீசிவிட்டார்கள். வெட்டப்பட்ட காட்சியில் நடித்தவர்கள் மவுன கண்ணீர் வடித்தார்கள். ஒரு வழியாக படம் ரெடியாகி வருகிற 30ந் தேதி வெளிவருகிறது.
விடுங்க பாஸ்... படம் ஹிட்டானா வெட்டினதை ஒட்டிக்கலாம்...