ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இசை அமைப்பாளர் இளையராஜா பாவலர் கிரியேஷன் சார்பில் பல படங்களை தயாரித்தார். ஆனால் எந்தப் படத்திலும் தயாரிப்பு இளையராஜா என்று போட்டுக் கொண்டதில்லை. இளையராஜாவும் சரி அவரது குடும்பமும் சரி கடந்த பல ஆண்டுகளாக படத் தயாரிப்பில் இருந்து விலகியே இருந்தது. இப்போது இளையராஜா குடும்பம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க இருக்கிறது. ராஜா சினி கிரியேஷன் என்பது புதிய நிறுவனத்தின் பெயராக இருக்குமாம். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என எல்லோர் பெயரிலும் ராஜா இருப்பதால் இந்த பெயராம். புதிய படத்தை இயக்கப்போகிறவர் வெங்கட்பிரபு, தயாரிப்பவர் யுவன். அண்ணனுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுக்க வேண்டும் என்பதற்காக கார்த்திக் ராஜாவிடமே இசை பொறுப்பை கொடுக்கப் போகிறார். கங்கை அமரன் பாடல்களை எழுதுகிறார். வாசுகிதான் காஸ்ட்யூம் டிசைனர். படத்தின் ஹீரோ யுவன் சங்கர் ராஜாதான் என்கிறார்கள். தம்பிக்கு ஏற்ற ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறாராம் அண்ணன் வெங்கட்பிரபு.
குடும்ப படமுன்னா இதுதானுங்களா...!