ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொலவெறி பாட்டு மூலம் உலகம் முழுக்க பிரபலமான தனுஷ், இப்போது முதன்முறையாக மலையாள படம் ஒன்றில், மம்முட்டி மற்றும் திலீப்புடன் சேர்ந்து நடிக்க உள்ளார். 3 படத்திற்கு பிறகு பாலிவுட் சென்ற தனுஷ், சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்சனா என்ற இந்தி படத்திலும், தமிழில் மரியான் என்ற படத்திலும் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து சற்குணத்தின் சொட்டவாழக்குட்டியில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் மம்முட்டி, திலீப் ஆகியோர் இணைந்து நடிக்கும் காமத் அண்ட் காமத் என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தனுஷூம் நடிக்க உள்ளார். தாம்பசன் இப்படத்தை இயக்குகிறார். பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் தனுஷ், இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க காரணம் மம்மூட்டி மீதுள்ள மரியாதை தானாம்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் தாம்ப்சன் கூறும்போது, காமத் அண்ட் காமத் படத்தின் கதையை தனுஷிடம், நான் கூறியபோது உடனே ஒப்புக்கொண்டார். படத்தில் அவரது என்ட்ரி திருப்புமுனையாக அமையும் என்றார்.