Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

58-ஐ எட்டிய கமல்! முத‌ல்வரிடம் ஆசி!! சினிமா பிரபலங்கள் வாழ்த்து!!!

07 நவ, 2012 - 16:22 IST
எழுத்தின் அளவு:

உலகநாயகன் என்று எல்லோராலும் அழைக்கப்பெறும் நடிகர் கமல்ஹாசன் இன்று(07.11.12) தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு இயக்குநர் சிகரம் பாலசந்தர், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

களத்தூர் கண்ணாமாவில் ஆரம்பித்து இப்போது விஸ்வரூபம் வரை விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறார் கமல்ஹாசன். நடிப்பு, நடனம், இயக்கம், கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பு என்று பன்முகம் கொண்ட கமல்ஹாசனுக்கு சினிமா மீது அப்படியொரு மோகம். எப்போதும் சினிமாவில் பல புதுமைகளை புகுத்தி கொண்டே இருக்கும் அவரது ஆற்றலுக்கு ஈடு இணை கிடையாது. இப்போதும் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு வர போராடி கொண்டு இருக்கிறார். இப்போது கூட அவர் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹாலிவுட் இணையான தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளார். அதிலும் சவுண்ட் தொழில்நுட்பத்தில் ஆரோ 3டி எனும் புதிய தொழில் உக்தியை புகுத்தியுள்ளார். இப்படத்தின் ஆரோ டிரைலரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற்ற கமல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தன்னுடைய பிறந்தநாளுக்கு முதல்வரிடம் ஆசி பெற வந்ததாகவும், தனது விஸ்வரூபம் படத்தில் ஆரோ தொழில்நுட்பம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கமல் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு திரைநட்சத்திரங்கள் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்திகள்...

இயக்குநர் சிகரம் பாலசந்தர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது, இன்றைய நவீன சினிமாவை பற்றிய அத்தனை விஷயங்களும் கமலிடம் உள்ளது. தமிழ் சினிமாவில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். விரைவில் ஹாலிவுட்டிலும் ஜெயிப்பார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

த்ரிஷா கூறியுள்ளதாவது, இன்றைய இளம் நடிகர்களுக்கு அவர்தான் ரோல்மாடல். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான தருணம். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரபுதேவா கூறியுள்ள வாழ்த்து செய்தியில், காதலா காதலா படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் நாங்கள் இப்போது சாதிப்பதற்கு முன்னோடியே அவர் தான். பல வருடங்களுக்கு முன்பே இந்தியில் சாதனை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.


பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்...!

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Rangarajan - trichy,இந்தியா
14 நவ, 2012 - 15:13 Report Abuse
 Rangarajan கமல் சார். ஹாப்பி பர்த்டே டு யு
Rate this:
mohan.k - nandyal,இந்தியா
10 நவ, 2012 - 10:38 Report Abuse
 mohan.k WISH YOU MANY MORE HAAPY BIRTHDAY TO YOU.
Rate this:
S.S.Senthil Kumar. - Aranthangi Tamil Nadu.,இந்தியா
08 நவ, 2012 - 17:52 Report Abuse
 S.S.Senthil Kumar. தமிழ் திரையுலகத்தின் இதயம் எங்கள் தலைவர். பத்ம ஸ்ரீ டாக்டர்.கமல் ஹாசன் அவர்களுக்கு, எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
08 நவ, 2012 - 09:09 Report Abuse
 பாண்டி கமல் சாருக்கு 58 ஆகி இருந்தாலும் இன்னும் விடலை பையன் மாதிரி நடந்துக்கறார். குடும்ப வாழ்க்கையிலும் குழப்பம் ஒரு ஸ்டேடினஸ் இல்லை. படம் எடுப்பதிலும் குழப்பம்.. என்ன மெசேஜ் சொல்லனும்னு குழப்பம். கடவுள் இருக்க இல்லையா என்பதிலும் குழப்பம். இனிமேலாவது குழப்பம் நீங்கி நடக்க வாழ்த்துக்கள்.
Rate this:
rasikan - toronto,கனடா
08 நவ, 2012 - 09:00 Report Abuse
 rasikan உலகநாயகனே என்னது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் உங்கள் விஸ்வரூபம் படமும் மாபெரும் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in