Advertisement

சிறப்புச்செய்திகள்

நான் மதம் பார்ப்பதில்லை! மனிதம் பார்ப்பவன்!! விஸ்வரூபம் விழாவில் கமல் பேச்சு!

07 நவ, 2012 - 15:47 IST
எழுத்தின் அளவு:

பத்மஸ்ரீ கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் ஆரோ 3டி டிரையிலர் அறிமுக விழா கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ம் தேதியான இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது! இவ்விழாவில் 5.1 ஸ்டிரியோ சவுண்ட் சிஸ்டத்தில் வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் முந்தைய டிரையிலரையும், அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு புதிய நவீன தொழில்நுட்பத்தில் தற்போது உருவாகியுள்ள ஆரோ 3டி விஸ்வரூபம் டிரையிலரையும், பத்திரிகை, மீடியாக்கள் முன்னிலையில் கமல் வெளியிட்டு பேசினார்.

இன்று எனது பிறந்தநாளில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் தனி ஹெலிகாப்டர் விமானம் மூலம் விஸ்வரூபம் படக்குழுவினருடன் சென்று அப்படத்தின் ஆடியோவை வெளியிடும் திட்டத்தில் இருந்தேன். ஆனால் வானிலை சரியில்லை... அவ்வாறு தற்போது செல்வது ரிஸ்க் என பல தரப்பினராலும் அறிவுறுத்தப்பட்டதால் அத்திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு இங்கு சென்னையில் விஸ்வரூபம் படத்தின் பிரமாண்டம் என ஆரோ 3டி சவுண்ட் எபெக்ட் டிரையிலரை ரிலீஸ் செய்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் படத்தை உருவாக்கி வருவதால் பட ரிலீஸ் தேதியும் இன்னும் முழுதாக முடிவு செய்யப்படவில்லை என்றார். பின்னர் அவரிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர் அதற்கு கமல் பொறுமையாக பதில் அளித்து பேசிய குறிப்பிடத்தக்கது.

அதன் சுவாரஸ்யமான விபரம் வருமாறு...


* கமல் ஹாலிவுட் செல்லும் திட்டம் என்னாயிற்று...?

எனது கதைகளை பார்த்து வியந்து ஹாலிவுட் இயக்குநர் நண்பர் ஒருவர் என்னிடம் ‌கதை கேட்டார். நானும் தயார் செய்துவிட்டேன். ஆனால் விஸ்வரூபம் பட வேலைகளால் அதை சரிபார்த்து அவரிடம் சமர்பிக்க முடியவில்லை. கூடிய விரைவில் அதுவும் நடக்கும்!

* விஸ்வரூபமே ஹாலிவுட் தரத்தில் உள்ளதே? இதையும் ஆங்கில படமாகவும் ரிலீஸ் செய்யலாமே?

அந்த முயற்சியும் நடக்கிறது. அதுவும் இப்பட தாமதத்திற்கு ஒரு காரணம்.

* விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. டைட்டிலில் கூட குரானில் உள்ளது மாதிரி வலப்பக்கமிருந்து இடப்பக்கம் செல்கிறது. இப்படம் தீவிரவாதத்திற்கு எதிரான படமா?

நான் அப்படி படம் எடுப்பேனா...? நான் மத பண்டிகைகளைக் கூட கொண்டாடாதவன். மனிதர்களை கொண்டாடுபவன். நான் மதம் பார்ப்பதில்லை... மனிதம் பார்ப்பவன். நெற்றில் குறியீடு யாராவது இட்டு வந்தால் கூட இவர் இவராக்கும், அவர் இவராக்கும்... என பேதம் பார்த்து அறியாதவன்! அப்படி இருக்கையில் நான் இப்படி படம் எடுப்பேனா? இது தீவிரவாதத்திற்கு எதிரானபடம் அவ்வளவே!

* விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான சொல்யூஷன் சொல்லப்பட்டு இருக்கிறதா...?

சொல்யூஷன் எதுவும் சொல்லவில்லை. சின்ன ஸ்டேட்மெண்ட் உண்டு! அதேநேரம் இது யாருக்கும் எதிரான போரும் இல்லை என்றார் கமல்.

பின்னர் அதே திரையரங்கில் தமிழகம் முழுவதிலிருந்து வந்திருந்த தனது ரசிகர்களுக்கும் விஸ்வரூபம் படத்தின் ஆரோ 3டி டிரையிலரை போட்டுகாட்டி இப்படம் பற்றி பேசினார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

arun - pondy,இந்தியா
27 டிச, 2012 - 14:22 Report Abuse
 arun தமிழனுக்கு thamizh நாட்ல mathipu இல்ல கமல விமர்சிக்க எவனுக்கும் தகுதி illa
Rate this:
jose - ramanathapuram,இந்தியா
16 டிச, 2012 - 23:57 Report Abuse
 jose திறமை இருந்தா யாரு வேண்டுமானாலும் சாதிக்கலாம். சரக்கு இல்லாம மேதைய குறை சொல்றது சுரியன பத்து dash குறைக்கிrathu mathiri இருக்கு மிஸ்டர் jk
Rate this:
குமார் - erode,இந்தியா
22 நவ, 2012 - 04:25 Report Abuse
 குமார் "நான் மதத்தை பார்க்கிறவன் அல்ல" ( இந்து மதத்தை மட்டும் பணத்துக்காகவும் புகழுக்காகவும் இழிவு செய்கிறவன் )
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
13 நவ, 2012 - 02:13 Report Abuse
Neelaa எல்லாம் சரி! கிட்டத்தட்ட ஒரு வருடமாக ட்ரைலர் தான் காண்பித்துக்கொன்டிருக்கிறார்! எனக்கென்னவோ ஊத்தல் படம் மாதிரி தான் தெரிகிறது! ஸ்ருங்கார நடனம் ஆடும் நாட்டிய வாத்தியார் ராத்திரி ஆனால், எப்படி உளவாளி, FBI/CBI என்ற ரேஞ்சில் அடி தடி சண்டை செய்கிறார் என்பது தான் கதை போல் தெரிகிறது! இதில் புதிய கதைக்களமோ, வியக்கத்தகு மேதாவித்தனமோ எங்கே இருக்கிறது?
Rate this:
ஒசாமா நெடுங்கிள்ளி - காபூல் ,ஆப்கானிஸ்தான்
10 நவ, 2012 - 00:50 Report Abuse
 ஒசாமா நெடுங்கிள்ளி படம் ஓடும்னு போடாதே தப்பு கணக்கு...!
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in