ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை ஓவியா கண்தானம் செய்துள்ளார். நடிகர், நடிகைகள் பலர் உடல் உறுப்புகளை தானம் செய்து வருகின்றனர். கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டோர் உடல் தானம் செய்துள்ளனர். சினேகா, பிரசன்னா கண் தானம் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஓவியாவும் கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். களவாணி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர். மெரினா, கலகலப்பு படங்களில் நடித்துள்ளார். தற்போது மேலும் 3 புதிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கண்தானம் குறித்து அவர் கூறுகையில், என் கண்களை நான் தானம் செய்துள்ளேன் இது சம்பந்தமான படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு மகிழ்ச்சியாய் உணர்கிறேன், என்றார். தனது ரசிகர்களும் கண்தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஓவியா.