பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |
விக்ரம் நடிப்பில் தாண்டவம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் அடுத்து விஜய்யை நாயகனாகக்கொண்டு தனது அடுத்த படத்தை இயக்குகிறார். தற்போது விஜய் துப்பாக்கி படத்தின் வேலைகளில் தீவிரமாக இருக்க, ஏ.எல்.விஜய்யோ, விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், பாடல் கம்போசிங் என்று களத்தில் இறங்கியுள்ளார்.
இந்தநிலையில், ஏற்கனவே விஜய்க்காக நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் தலைவன் என்ற பெயரில் ஒரு படம் தற்போது தயாராகி வருகிறதே? நீங்கள் அதே தலைப்பைத்தான் விஜய் படத்துக்கு வைக்கப்போகிறீர்களா? இல்லை வேறு தலைப்பு யோசிக்கிறீர்களா? என்று கேட்டபோது, தலைவன் என்ற தலைப்புதான் எனது கதைக்கு பொருத்தமாக இருக்கும். அதனால் அந்த தலைப்பை சேம்பரில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது இன்னொரு படமும் அதே தலைப்பில் உருவாகி வருகிறது. அதனால் எதற்கு பிரச்சினை என்று நான் வேறு தலைப்பை வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்
ஏ.எல்.விஜய். ஏற்கனவே தெய்வத்திருமகன் படத்தின் தலைபபு பிரச்சினை. அடுத்து தாண்டவம் கதை பிரச்சினை என்று பல சர்ச்சைகளுக்கு உள்ளானதால், மீண்டும் இன்னொரு சர்ச்சை வேண்டாமே என்று அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.