விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |
கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு சினிமாவில் காஜல் அகர்வாலின் காற்று வேகமாக அடித்து வந்தது. ஆனால், அவர் தனது தாய்மொழியான இந்திப்படங்களில் நடிக்கத் தொடங்கியதும், தொடர்ந்து சான்ஸ் கொடுத்து வந்த தெலுங்கு ஹீரோக்களின் படங்களையே தவிர்க்கத் தொடங்கிவிட்டாராம். சிலர் என் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் அதற்கு செவி சாய்க்கவில்லையாம் காஜல்.
இதற்கிடையே தமிழுக்கு வந்து மாற்றான், துப்பாக்கி படங்களில் நடித்த காஜல், சென்னைக்கும், மும்பைக்குமாக பறந்து கொண்டிருந்தாரேயொழிய, ஆந்திரா பக்கம் தலைகாட்டவேயில்லையாம். இதனால் தங்களது அழைப்பை நிராகரித்த காஜலை இத்தோடு ஓரங்கட்டிவிட வேண்டியதான் என்று அங்குள்ள முன்னணி சினிமாக்காரர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களாம். இதை கேள்விப்பட்டும் கலங்கவில்லை காஜல், இனி நீங்களே மனசு மாறி என்னை அழைத்தாலும் நான் வருவதாக இல்லை. பாலிவுட்டில் முழுநேர நடிகையாகவதே எனது எதிர்கால சினிமா லட்சியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.