பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நல்லவன் - கெட்டவன் என, இரு மாறுபட்ட வேடங்களில் சூர்யா நடித்திருக்கும், "மாற்றான் படம், ரசிகர்கள் வட்டாரத்தில், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான சூர்யாவுக்கு நடுவே, சிக்கித் தவிக்கும் காஜல் அகர்வாலின் காதல் போராட்டத்தை, இயக்குனர் கே.வி.ஆனந்த் அழகான திரைக்கதையாக்கி உள்ளார். "மாற்றான் திரைப்படம், வெகு விரைவில் திரைக்கு தரிசனம் தரவுள்ளது. இதற்கு நடுவே, "மாற்றான் படத்தை, "பிரதர்ஸ் என்ற பெயரில் தெலுங்கு பேச வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. சூர்யாவின் பல படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் சூர்யாவுக்காக அங்குள்ள "டப்பிங் கலைஞர் ஒருவர் தான் குரல் கொடுத்து வந்தார். ஆனால், இந்த முறை அப்படிச் செய்யாமல், அண்ணன் சூர்யாவுக்காக, தம்பி கார்த்தி இரவல் குரல் கொடுக்கிறார். "டப்பிங்கின்போது கார்த்தி தெலுங்கு பேசிய அழகைப் பார்த்து பூரித்துப் போனாராம் சூர்யா.